• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தனியார் ரயில் தொடர்பாக இன்று முக்கிய முடிவு - கட்டண சலுகைகள் தொடர வாய்ப்பு இல்லை என்று தகவல்

தனியார் ரயில் தொடர்பாக இன்று முக்கிய முடிவு - கட்டண சலுகைகள் தொடர வாய்ப்பு இல்லை என்று தகவல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் தனியார் பயணிகள் ரயில்களை இயக்குவது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

இந்தியாவின் முதல் தனியார் பயணிகள் ரயில் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் இருந்து டெல்லிக்கு அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. ரயில்வேயின் ஒரு அங்கமான ஐஆர்சிடிசி அந்த ரயிலின் உரிமையாளராக இருக்கும்.

அதனைத் தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 150 தனியார் பயணிகள் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 24 வழித்தடங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. டெல்லியில் இன்று நடைபெறும் ரயில்வே வாரியக் கூட்டத்தில் இந்த 24 வழித்தடங்களில் தனியார் ரயில்களை அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்ப்பட உள்ளது.

தமிழகத்தில் சென்னையில் இருந்து மதுரை, கோவை, பெங்களூரு இடையே இன்டர் சிட்டி ரயில்களை தனியார் இயக்க அனுமதிப்பது தொடர்பான யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து டெல்லி, ஹவுரா, மும்பை என நீண்ட தூரம் செல்லும் ரயில்களிலும் தனியார் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல சென்னையில் புறநகர் மின்சார ரயில்களிலும் தனியாரை அனுமதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எந்தெந்த வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்குவது என இன்று முடிவு எடுக்கப்பட்டால் அதன்பிறகு அந்த வழித்தடங்கள் ஏலத்தில் விடப்படும்.

ரயிலை இயக்கும் பணியாளர்களை தனியாரே தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். தண்டவாளம் மற்றும் ரயில் நிலையங்களை பயன்படுத்துவதற்கு தனியார் நிறுவனங்கள் கட்டணம் செலுத்தும். பயணிகளுக்கான கட்டணத்தை ரயிலை இயக்கும் தனியார் நிறுவனமே முடிவு செய்யும்.

மூத்த குடிமக்கள் உள்ளிட்ட 53 பிரிவினருக்கு ரயில் கட்டணத்தில் சலுகைகள் அளிக்கப்படும் நிலையில் அவற்றை தனியார் தொடர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: