இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் நிறுவனத்தின் பால் விலை நாளை முதல் உயர்கிறது.
கொள்முதல், பயன்பாடு, செலவீனங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தனியார் பால் நிறுவனங்கள் அவ்வப்போது பால் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் திருமலா, ஹெரிடேஜ், ஜெர்சி, டோட்லா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 முதல் 4 வரை உயர்த்தின.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் மக்கள் நலன் கருதி விலையேற்றம் செய்யாமல் இருந்ததாகவும், தற்போது விலையை உயர்த்தும் அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்தியாவசிய பொருளான பாலின் விலை அடிக்கடி உயர்த்தப்படுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க -
உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி
பால் விலையை அரசு வரைமுறைப் படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் சமீபத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் அமுல் நிறுவனம், பால்விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதையும் படிங்க -
MahaShivRatri2022 : மஹாசிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி சத்குருவுக்கு வாழ்த்து
புதிய விலை உயர்வுக்கு பின்னர் அரைலிட்டர் அமுல் கோல்டு ரூ. 30-க்கும், அமுல் சக்தி ரூ.27-க்கும், அமுல் டாஸா ரூ. 24-க்கும் விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.