Home /News /national /

பூஸ்டர் தடுப்பூசி சேவை கட்டணம்: தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

பூஸ்டர் தடுப்பூசி சேவை கட்டணம்: தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

corona booster dose: தற்போது வரை முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ் ஆனது சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது. நாளை முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
    தனியார் மருத்துவமனைகளில் கோவிட் தடுப்பூசி செலுத்த ரூ.150 வரை மட்டுமே சேவை கட்டணம் வசூலுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாளை தொடங்கவுள்ளது. இவை தனியார் மருத்துவமனைகள், மையங்களில் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில்,தனியார் மருத்துவமனைகள் மற்றும் மையங்கள் தடுப்பூசியின் விலையுடன் கூடுதலாக ரூ.150 வரை சேவை கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், பயனாளர்கள் தங்களின் முதல் இரண்டு டோஸ்களை எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்களோ, அதே தடுப்பூசியைத் தான் முன்னெச்சரிக்கை டோஸ்க்கும் பயன்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தற்போது வரை முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ் ஆனது சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது. நாளை முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம். அதேவேளை இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாத காலம் நிறைவான பின்னரே முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்திக்கொள்பவர்கள் தங்கள் விவரங்களை புதிதாக COWIN தளத்தில் பதிய வேண்டியது இல்லை. முதல் டோஸ் செலுத்திய போதே அவர்களின் தரவுகள் தளத்தில் பதியப்பட்டிருக்கும்.

    இதையும் படிங்க: பூஸ்டர் டோஸ்: கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.1200ல் இருந்து ரூ.225 ஆக குறைப்பு


    COWIN இணையதளத்தின் தரவுகள் படி, நாட்டில் மொத்தம் 185.57 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள்கள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. இதில் 99.47 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 83.80 கோடி பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 2.29 கோடி பேர் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    முன்னதாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசி டோஸ்களின் விலையை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் வெகுவாக குறைத்துள்ளன. கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனம் ஒரு டோஸ் தடுப்பூசி விலையை ரூ.600இல் இருந்து ரூ.225ஆக குறைத்துள்ளது.

    மேலும் படிக்க: உத்தரப்பிரதேச சிறைகளில் இனி காயத்ரி மந்திரம் ஒலிக்கும்... யோகி அரசு அறிவிப்பு


    அதேபோல், கோவாக்ஸின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோட்டெக் நிறுவனம் ஒரு டோஸ் தடுப்பூசி விலையை ரூ.1,200இல் இருந்து ரூ.225ஆக குறைத்துள்ளது. இந்த தடுப்பூசிகள் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மையங்களில் இலவசமாக செலுத்தப்படுகின்றன.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona Vaccine

    அடுத்த செய்தி