ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாட்டிலேயே முதல் முறையாக ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கும் வசதி.. அசத்தும் தனியார் நிறுவனம்..!

நாட்டிலேயே முதல் முறையாக ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கும் வசதி.. அசத்தும் தனியார் நிறுவனம்..!

ஐதராபாத்தில் வைக்கப்பட்டுள்ள மெஷின்

ஐதராபாத்தில் வைக்கப்பட்டுள்ள மெஷின்

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி, அரை கிராம் முதல் ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து, இருபது, ஐம்பது மற்றும் 100 கிராம் தங்க காசுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Hyderabad, India

நாட்டிலேயே முதல் முறையாக ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கும் வசதியை ஐதரபாத்தில் தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

சாக்கலேட், பணம் வரிசையில் தங்கத்தை 24 மணி நேரமும் வழங்கும் ஏடிஎம் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. காசு கொடுத்தால் சாக்லேட்டை வெளியே தள்ளும் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் அட்டையை தேய்த்தால் பணத்தை வெளியே தள்ளும் ஏடிஎம் எனப்படும் ஆட்டமேட்டட் டெல்லர் மெஷின்.

அந்த வரிசையில், நாட்டில் முதல் முறையாக ஹைதராபாத்தில் தங்க காசுகள் வழங்கும் ஏடிஎம் தனியார் நிறுவனம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தங்கத்தை வழங்கும் இயந்திரத்தை நிறுவியுள்ளது ஹைதராபாத்தைச் சேர்ந்த Goldsikka என்ற தனியார் நிறுவனம். இந்த ஏடிஎம்மில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ தங்கத்தை இருப்பு வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : நீச்சல் குளத்தில் குதூகலமாக விளையாடிய ‘பாப் கட்’ செங்கமலம் யானை.. கைதட்டி ரசித்த பொதுமக்கள்!

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி, அரை கிராம் முதல் ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து, இருபது, ஐம்பது மற்றும் 100 கிராம் தங்க காசுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்துக்கான விலையில் தங்கம் வாங்குவதற்கு, இந்தியாவில் மட்டுமல்ல உலகில் இதுதான் முதல் தங்க ஏடிஎம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகில் இதுதான் முதல் தங்க ஏடிஎம் என கூறும் Goldsikka நிறுவனம், தெலங்கானா முழுவதும் பல்வேறு இடங்களில் தங்க ஏடிஎம்களை தொடங்க முடிவு செய்துள்ளது.இனி அட்சய திருதி நாளன்று, நகைக்கடைகளைவிட, இந்த ஏடிஎம்-கள் வாயில் கூட்டம் அதிகரித்து காணப்படலாம்..

First published:

Tags: Gold, India