• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காங்கிரஸ் தலைவர்களின் சீக்ரெட் பேச்சு.. அம்பலமான கமிஷன் பிசினஸ்.. சிக்கலில் டி.கே.சிவக்குமார்!

காங்கிரஸ் தலைவர்களின் சீக்ரெட் பேச்சு.. அம்பலமான கமிஷன் பிசினஸ்.. சிக்கலில் டி.கே.சிவக்குமார்!

Karnataka congress

Karnataka congress

சலீம் - உக்ரப்பா இருவரும் பேசிக்கொண்ட இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு தலைகுணிவையும் ஏற்படுத்தியிருக்கிறது.

  • Share this:
செய்தியாளர் சந்திப்புக்கு முன்னர் மேடையில் இரு காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் முன் இருக்கக்கூடிய மைக் ஆன் செய்த நிலையில் இருப்பதை அறியாமல் கர்நாடாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஊழல் செய்து வருவதாக பேசிய உரையாடலின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான எதிர்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருக்கும் டி.கே.சிவக்குமாருக்கும், முன்னாள் முதல்வரான சித்தராமையாவிற்கும் இடையே பஞ்சாப் காங்கிரஸில் சித்துவுக்கும், அமரீந்தர் சிங்கிற்கும் இடையே ஏற்பட்டதைப் போல அதிகார மோதல் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதே இருவருக்குமான புகைச்சலுக்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது.

இதுபோன்ற சூழலில் தான் டி.கே.சிவக்குமாருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக செய்தியாளர் சந்திப்பில் இரு காங்கிரஸ் தலைவர்களின் ரகசிய பேச்சு அமைந்தது.



பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பு தொடங்குவதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சலீம் மற்றும் முன்னாள் எம்.பி உக்ரப்பா ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். செய்தியாளர்கள் சற்று தள்ளியே இருந்ததால் அவர்களுக்கு கேட்காது என நினைத்து இருவரும் தேனீர் அருந்தியவாறே ரகசிய பேச்சில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு முன் இருந்த மைக் ஆன் நிலையில் இருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

Sidharamaiah - DK Shivakumar


Also Read: அக்டோபர் 15 முதல் விற்பனைக்கு வரும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 – ரூ.3,000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிப்பு!

மெல்லிய குரலில் பேசிய சலீம், டி.கே.சிவக்குமார் முன்பெல்லாம் 8-10 சதவீதம் கமிஷன் வாங்கினார், ஆனால் தற்போது 10 முதல் 12 சதவிகிதம் வரை கமிஷன் பெருகிறார். அவருடைய உதவியாளரே 50 முதல் 100 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார் என்றால் சிவக்குமார் எவ்வளவு சம்பாதித்திருப்பார் என பாருங்கள். இதற்கு பதிலளித்த உக்ரப்பா, நாமெல்லாம் சிவக்குமாரை மாநில தலைவராக்க சிரமப்பட்டோம் ஆனால் இவரால் நமக்கும் கட்சிக்கும் கெடுதல் தான் என்றார்.

பின்னர் சலீம் பேசுகையில், அவர் சரக்கு அடிப்பார் போல தெரிகிறது, அவருடைய பேச்சில் தடுமாற்றம் தெரிகிறது. ஆனால் சித்தராமையா கம்பீரமானவர் என பேசியவாறே இருவரும் சிரிக்கின்றனர்.

Also Read:   Youtube மூலம் ஆன்லைனில் சம்பாதிப்பது எப்படி? வழிமுறை இதோ…

சலீம் - உக்ரப்பா இருவரும் பேசிக்கொண்ட இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு தலைகுணிவையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஆராய்ந்தது, சலீமை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கியிருப்பதுடன், உக்ரப்பாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: