விசாரணை கைதி மர்ம மரணம் - காட்டிக்கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை: நடந்தது என்ன?

கேரளாவில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் 40 இடங்களில் பலத்த காயம் மற்றும் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்தது தெரியவந்ததால் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷெமீர் உட்பட 4 பேரை கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி திருச்சூர் மாவட்ட நகர பேருந்து நிலைய பகுதியில் இருந்து 10 கிலோ கஞ்சாவுடன் கேரளா போலீசார் கைது செய்தனர். கொரோனா சோதனை மேற்கொண்ட பின்பு வியூர் சிறையில் உள்ள கொரோனா மையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அங்கு திடீரென ஷெமீர்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திரிசூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கும்போது ஷெமீர் சுய நினைவில்லாமல் இருந்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஒன்றாம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் ஷெமீரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியாகி போலீசாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ஷெமீரின் உடல் முழுவதும் 40 இடங்களில் படு காயங்கள் ஏற்பட்டிருந்ததும் உடலின் நெஞ்சு மற்றும் பல பகுதிகளில் எலும்பு முறிந்தும் இருந்தது தெரியவந்தது. மேலும் இதில் தலை பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த காயங்கள் பெரும்பாலும் லத்தியால் ஏற்பட்ட காயங்கள் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படுட்டுள்ளது.

மேலும் படிக்க...பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவம் - வார்டு உறுப்பினர் கைது 

விசாரணை கைதியாக இருந்தவர் போலீசாரால் கொடூரமாக துன்புறுத்தி உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
First published: October 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading