“ஓட்டு முக்கியமில்லை; முற்போக்கான கேரளாதான் முக்கியம்” - பினராயி விஜயன்

Sabarimala | சபரிமலை பிரச்சனையை கையில் எடுத்துள்ள கேரள மாநில பாஜக, அதனை தனது அடுத்தகட்ட அரசியலுக்கு மிக லாவகமாக பயன்படுத்தி வருகிறது.

“ஓட்டு முக்கியமில்லை; முற்போக்கான கேரளாதான் முக்கியம்” - பினராயி விஜயன்
பினராயி விஜயன்
  • News18
  • Last Updated: November 8, 2018, 2:06 PM IST
  • Share this:
தேர்தலில் கிடைக்கும் ஓட்டுகளை இழப்பது பற்றி கவலை இல்லை, முற்போக்கான பாதையில் இருக்கும் கேரளாவை இழக்க முடியாது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை அமல்படுத்துவதில் கேரள மாநில அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டது. தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணி (கோப்புப்படம்)இரண்டு முறை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட போதும், கோவிலுக்குள் சில பெண்கள் நுழைய முயற்சிக்கவே அப்பகுதியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. போராட்டங்கள் வன்முறையாக வெடிக்க, போலீஸ் தடியடி கைது என பிரச்னை நீண்டு கொண்டே சென்றது. சபரிமலை பிரச்னையை கையில் எடுத்துள்ள அம்மாநில பாஜக, அதனை தனது அடுத்தகட்ட அரசியலுக்கு மிக லாவகமாக பயன்படுத்தி வருகிறது.

திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசும் பினராயி விஜயன்


திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், “தேர்தலில் ஓட்டுகளை இழப்பதும், சில தொகுதிகளை இழப்பதும் ஒரு பிரச்னையே இல்லை. எந்த பிரிவினையும் இல்லாமல் மற்றவர்களை பார்க்கும் மக்கள் இருக்கக்கூடிய முற்போக்கான கேரளாவை எதற்காகவும் இழக்க முடியாது. சில பேர் கேரளாவில் வகுப்புவாத பிரிவினையை கொண்டுவர முயற்சிக்கின்றனர். அதனை நாம் அனுமதித்தால், இப்போது இருக்கும் கேரளா எதிர்காலத்தில் இருக்காது” என்று கூறினார்.மேலும் செய்திகள்..

3 வயது குழந்தையின் வாயில் வெடி வைத்த கொடூரன்

Also See..

First published: November 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading