2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம் - ரிசர்வ் வங்கி

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம் - ரிசர்வ் வங்கி
  • News18
  • Last Updated: October 15, 2019, 8:20 AM IST
  • Share this:
கள்ள நோட்டுகள் புழக்கத்தை தடுப்பதற்காக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது குறைந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஆங்கில நாளிதழ் ஒன்று கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டபோது அச்சிடப்பட்ட அளவை விட அதற்கடுத்த நிதியாண்டுகளில் அச்சடிப்பட்டது படிப்படியாக குறைத்ததாக தெரிவித்துள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றைக் கூட அச்சிடவில்லை என்றும் கள்ள நோட்டுகள் புழக்கத்தை தடுப்பதற்காக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது


2016-2017-ம் நிதியாண்டில் 3542.991 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டிருந்த நிலையில் 2017-2018-ம் நிதியாண்டில் 111.507 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் இருப்பது கருப்புப் பண பரிமாற்றத்தை தடுக்கும் என்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிகரிக்கவும் உதவும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

Also watch

Loading...

First published: October 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...