ஜிக்னேஷ் மேவானிக்கு அனுமதி மறுப்பு! ராஜினாமா செய்த கல்லூரி முதல்வர்

தற்போதைய அரசியல் சூழலில் காரணமாக அனுமதி ரத்து செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

news18
Updated: February 12, 2019, 2:18 PM IST
ஜிக்னேஷ் மேவானிக்கு அனுமதி மறுப்பு! ராஜினாமா செய்த கல்லூரி முதல்வர்
குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி
news18
Updated: February 12, 2019, 2:18 PM IST
அஹமதாபாத்திலுள்ள கல்லூரி நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி பங்கேற்பதற்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவி விலகினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ளது ஹெச்.கே. கலைக் கல்லூரி. குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும் தலித் செயற்பாட்டாளமுனா ஜிக்னேஷ் மேவானி இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவராவர்.

இந்தக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று ஜிக்னேஷ் மேவானி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

திடீரென்று, நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி பங்கேற்பதற்கு கல்லூரி நிர்வாகம் தடைவிதித்தது. கல்லூரி நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி கலந்துகொள்வதற்கு வலதுசாரி மாணவர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது என்று காரணம் கூறப்பட்டது.

இந்தநிலையில், கல்லூரி நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரியின் முதல்வர் ஹேமந்த் குமார் ஷா மற்றும் துணை முதல்வர் மோகன்பாய் பார்மர் பதவி விலகினர்.

இதுகுறித்து தெரிவித்த பேராசிரியர் ஹேமந்த் குமார், ‘நேற்று மாலை 4 மணி அளவில் கல்லூரி நிர்வாகத்திடமிருந்து கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், கல்லூரி நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி பங்கேற்பதற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போதைய அரசியல் சூழலில் காரணமாக அனுமதி ரத்து செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எந்த அரசியல் காரணம் என்ற கேள்வி என்னிடம் உள்ளது.
Loading...
தற்போதைய அரசியல் சூழலையும் உள்ளடக்கிதான், சுதந்திரமாக பேசுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்த முடியாவிட்டால் மனிதன் மனிதனாக இருக்க முடியாது.

மேலும், மாணவர்கள், அரசமைப்பின் சிப்பாய்களாக வருவதை கருத்து சுதந்திரம் குறைக்கும். அரசியல் அழுத்தம் காரணமாக, கல்லூரி நிர்வாகம் கருத்துச் சுதந்திரத்தைக் கொலை செய்தது வலி நிறைந்தது. அவமான ஒன்று’ என்று தெரிவித்துள்ளார்.

கல்லூரியின் துணை முதல்வர் மோகன்பாய் பாரிமரும் இதே காரணத்தை தெரிவித்துள்ளார். கல்லூரி நிகழ்வில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு ஜிக்னேஷ் மேவானி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கருத்து சுதந்திரத்துக்காக பதவி விலகிய பேராசிரியர்களுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.

Also see:

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...