முகப்பு /செய்தி /இந்தியா / ஸ்ரீநகரில் அரசுப்பள்ளிக்குள் புகுந்து முதல்வர், ஆசிரியர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல்

ஸ்ரீநகரில் அரசுப்பள்ளிக்குள் புகுந்து முதல்வர், ஆசிரியர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல்

தாக்குதல் நடந்த பள்ளிக்குள் பாதுகாப்புப் படையினர்.

தாக்குதல் நடந்த பள்ளிக்குள் பாதுகாப்புப் படையினர்.

காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் பிரின்ஸ்பால் மற்றும் ஆசிரியரை தீவிரவாதிகள் பள்ளிக்குள்ளேயே வைத்துச் சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பாகியுள்ளது.

  • Last Updated :

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலை துாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில், பயங்கரவாதிகளால் பொதுமக்கள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதன்பின், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு ராணுவப்படை குவிக்கப்பட்டு வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தன, ஆனால் திடீரென அங்கு தி ரெசிஸ்டண்ட் ஃபோர்ஸ் என்ற ஒரு தீவிரவாத அமைப்பு தலைத்தூக்கியுள்ளது. காஷ்மீரி பண்டிடி உட்பட 3 அப்பாவி மக்கள் 2 நாட்களில் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அரசுப்பள்ளியில் முதல்வர் மற்றும் ஆசிரியர் கொலைகளுக்கும் பொறுப்பேற்றது இந்த தி ரெசிஸ்டண்ட் ஃபோர்ஸ் தீவிரவாத அமைப்பே.

ஸ்ரீநகர் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளிக்குள் புகுந்த தீவிரவாதிகள் நேருக்கு நேர் முதல்வரையும் ஆசிரியர் ஒருவரையும் சுட்டுக் கொன்றனர், இவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பலியாகி விட்டனர். பள்ளி முதல்வர் சுப்ரீந்தர் கவுர், வயது 46, காஷ்மீரி பண்டிட் ஆன தீபக் சந்த், 38 ஆகியோர்தான் தீவிரவாதிகளின் வெறிச்செயலுக்கு பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்குகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் 6 நாட்களில் 7 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சிறுபான்மை ஆசிரியர்கள் பலர் விரைவில் முஸ்லிம் சகாக்கள் உதவியுடன் வீடு திரும்பினர். காஷ்மீரி பண்டிட்கள், இந்துக்கள் வசிக்கும் பகுதிகளிலும், அவர்கள் வர்த்தகம் செய்யும் இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் குறித்து காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் கூறும்போது, “இது காஷ்மீர் முஸ்லிம்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல். அப்பாவி ஆசிரியர், பள்ளி முதல்வர் உட்பட அப்பாவி மக்களைக் கொல்வதென்றால் அங்கு இத்தனையாண்டுகாலம் இருந்து வரும் மத ஒற்றுமை, நல்லிணக்கத்தைக் குறிவைத்து தாக்குதல் நடைபெறுகிறது. சகோதரத்துவத்தை முறியடிக்கும் செயல். எனவே கொலையாளிகளை விரைவில் பிடிப்போம்” என்றார்.

மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹ்பூபா முப்தி கூறும்போது, “காஷ்மீரில் நிலை சீரழிவை நோக்கிச் செல்வதைப் பார்க்கும் போது வேதனையளிக்கிறது. குறைந்த எண்ணிககி மைனாரிட்டிகளை தாக்குவது இப்போது கவலையளிக்கிறது. இந்திய அரசு புதிய காஷ்மீர் படைப்போம் என்று முழங்கினர். ஆனால் நரகமாகிவிட்டது காஷ்மீர். தங்களது தேர்தல் லாபங்களுக்காக காஷ்மீரை கரவை மாடாக இந்திய அரசு பயன்படுத்துகிறது” என்று சாடினார்.

First published:

Tags: Kashmir, Terrorists