உத்திரமேரூர் குடவோலை முறை பற்றி பேசிய பிரதமர்- நன்றி தெரிவித்தார் முதலமைச்சர்

உத்திரமேரூர் குடவோலை முறை பற்றி பேசிய பிரதமர்- நன்றி தெரிவித்தார் முதலமைச்சர்

பிரதமர் மோடி

மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு பற்றியும் உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மகா சபை நடந்துள்ளது.

 • Share this:
  டெல்லியில், புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உத்திரமேரூர் குடவோலை முறையை நினைவுபடுத்தி பெருமிதமாகப் பேசினார்.

  அவர் பேசுகையில், “சென்னை அருகே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்திரமேரூரில் கிடைத்துள்ள கல்வெட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.  அந்தக் கல்வெட்டில், பஞ்சாயத்து தேர்தல் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு பற்றியும் உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மகா சபை நடந்துள்ளது. மக்கள் சபை நடந்தது பற்றி அந்தக் கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

  இந்நிலையில், குடவேலை முறையைப் பற்றி பிரதமர்  பேசியதற்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற அடிக்கல் நாட்டுவிழாவில் காணொலி காட்சி மூலம் கந்துகொண்டதில் மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.

  அடிக்கல் நாட்டப்பட்ட, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை இந்தியாவின் 75-வது சுதந்திர கட்டடத்தை, 2022-ஆம் ஆண்டின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக  எழுப்புவதற்கான திட்டப்பணியில் மத்திய தீவிரம்காட்டி வருகின்றது.

  இந்நிலையில், கட்டப்பட இருக்கும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், தரை தளம், தரைக்கு கீழே ஒரு தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மொத்தம் 4 தளங்கள் அமைய இருக்கின்றன. நாட்டின் பாரம்பர்யத்தை வெளிப்படுத்தும் வகையில் அமையும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நாடு முழுதும் உள்ள கைவினை கலைஞர்களின் பங்களிப்பு இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: