இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி
- News18 Tamil
- Last Updated: November 29, 2020, 7:36 AM IST
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்று அழைக்கப்படும் காலத்தின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, 71-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். அந்த வகையில் செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று, காலை 11 மணிக்கு பிரதமர் உரையாற்றவிருக்கிறார்.
அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும். இன்று காலை 11 மணிக்கு, அவரின் இந்த உரை தொடங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை குறித்தும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க...உருவாகிறது புதிய புயல்? தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி மருந்து மற்றும் பொது முடக்க தளர்வுகள் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என தெரிகிறது.
அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருங்கள்
அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும். இன்று காலை 11 மணிக்கு, அவரின் இந்த உரை தொடங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை குறித்தும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி மருந்து மற்றும் பொது முடக்க தளர்வுகள் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என தெரிகிறது.
அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருங்கள்