Home /News /national /

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு - பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு - பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கைச் செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் நாடு தழுவிய  இறுதிச் சடங்கு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக ஜப்பான் நாட்டின் ஊடகம் அறிவித்துள்ளது.

    ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கைச் செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் கிட்டானோமாரு தேசிய பூங்காவில் உள்ள நிப்பான் புடோகன் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என்று ஜப்பான் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

    மேலும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து தற்போதைய பிரதமரான ஃபுமியோ கிஷிடாவை பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் ஜப்பானின் உறவு ஷின்சோ அபே தலைமையிலான அரசிலிருந்து நட்பு ரீதியாக நல்ல இணைப்பிலிருந்து வருகிறது. குவாட் நாடுகள் கூட்டுறவின் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் இணைந்து இந்தியா, ஜப்பான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

    Also Read : நாட்டின் மிகப் பெரிய மருத்துவமனையை தொடங்கிவைத்த பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஷின்சோ அபேவும் நல்ல நண்பர்கள். 2018ம் ஆண்டு பிரதமர் ஜப்பானுக்குச் சென்றபோது இருவரின் நட்பு அதிகரித்தது. மேலும் கடந்த மே மாதம் ஷின்சோ அபே பிரதமர் பதவியில் இல்லாதபோதும் பிரதமர் நரேந்திர மோடி அவரை சந்தித்துப் பேசினார்.

    ஷின்சோ அபே கொல்லப்பட்ட செய்தியை அறிந்த பிரதமர் மோடி  இரங்கலைத் தெரிவித்திருந்தார். அதில் அவர் தனது நண்பனை இழந்துவிட்டதாகவும், ஜப்பான் மற்றும் உலகமே சிறந்த தொலைநோக்கு பார்வையாளரை இழந்துவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Funeral, Japan, Prime Minister Narendra Modi, Shinzo Abe

    அடுத்த செய்தி