ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே நமது இலக்கு என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும் இந்த கருப்பொருளை உலகிற்கு இந்தியா வழங்கியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்று தமது எண்ணங்களை அகில இந்திய வானொலி மூலம், நாட்டு மக்களிடையே பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் 95வது மனதின் குரல் நிகழ்ச்சியில் வானொலி மூலமாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது ஜி20 மாநாட்டுக்கு தலைமை வகிப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை மற்றும் பொறுப்பு என்றார்.
உலக அமைதி, ஒற்றுமை, உணவு பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தவுள்ளதாகவும், "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற கருப்பொருளை இந்தியா ஜி20 நாடுகளுக்கு வழங்கியிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
தீபாவளிக்கு ஒருநாள் முன்னதாக ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களை இந்தியா விண்வெளியில் நிலைநிறுத்தியதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இதன்மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை டிஜிட்டல் இணைப்பு பலப்படுத்தப்படும் என்றார்.
தனியார் பங்களிப்புடன் விக்ரம் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது இந்திய விண்வெளித் துறையின் புதிய சகாப்தம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : ''ஒன்றரை வருஷமா சொல்றாங்க..'' அமைச்சர் பதவி குறித்து பளீரென பேசிய உதயநிதி
மேலும் நமது கலாச்சாரத்தில், பாரம்பரிய இசை தெய்வீகமாக கருதப்படுகிறது. நமது தெய்வங்களும் பல இசைக்கருவிகளை வாசிப்பதாகக் காட்டப்படுகின்றன. ஓடும் ஆறுகள் முதல் பறவைகளின் சத்தம் வரை எல்லா இடங்களிலும் இசையைக் காணலாம் என்று தெரிவித்த அவர், ’நாகாலாந்தின் நாகா சமூகத்தினரின் வாழ்க்கை முறை, கலை, கலாச்சாரம், இசை உள்ளிட்டவைகளை பாதுகாக்க இயங்கி வரும் லிடி -கிரோ-யூ என்ற அமைப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Modi, Modi Radio speech