Home /News /national /

Cyclone Tauktae : குஜராத்தில் புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

Cyclone Tauktae : குஜராத்தில் புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

‘டவ் தே’ புயல் காரணமாக குஜராத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட உள்ளார்.

    அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில நாட்களுக்கு முன்னர் அதிதீவிர புயலாக வலுவடைந்தது. டவ் தே என்ற பெயரிடப்பட்ட இந்த புயலால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மிகக் கன மழை பெய்தது.

    இந்த புயல் குஜராத்தில் கரையை கடந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன. மரங்களும், மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. புயலின் தாக்கத்தால் 7 பேர் உயிரிழந்தனர்.

    டவ் தே புயல்லால் ஏற்பட்ட சேதங்களின் விவரங்களை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். இந்நிலையில், புயல் சேதங்களை பார்வையிட பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்.

    Must Read : கொரோனாவுக்கு பெற்றோரைப் பறிகொடுத்த குழந்தைகள் பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட்: ஆந்திரா முதல்வர் அறிவிப்பு

     

    அதன்படி, டெல்லியில் இருந்து காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் குஜராத்தில் உள்ள பவ் நகருக்குச் செல்லும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்று புயல் சேதங்களை பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Cyclone, Gujarat, Narendra Modi

    அடுத்த செய்தி