மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை

பிரதமர் மோடி

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கணிக்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.ஒருபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் நிலையில், ஒருநாள் பாதிப்பு உலக அளவில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் 3 லட்சத்தை கடந்துள்ளது. இதனால், அதிகம் பாதிப்பு உள்ள மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  அதேவேளையில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் இன்று காலை 10 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

  அப்போது, தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்துவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். அத்துடன், நண்பகல் 12.30 மணிக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

  மேலும், கொரோனா தடுப்பு குறித்து உயர்மட்ட குழுவுடன் பேசவுள்ளதால், தேர்தல் பிரசாரத்துக்காக மேற்குவங்கத்தில் இன்று மேற்கொள்ள இருந்த பயணத்தை ரத்து செய்வதாக பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: