World Health Day : உலக சுகாதார தினம்... நாட்டுமக்களுக்கு பிரதமரின் வேண்டுகோள்

World Health Day : உலக சுகாதார தினம்... நாட்டுமக்களுக்கு பிரதமரின் வேண்டுகோள்

பிரதமர் மோடி

உலக சுகாதார தினமாக இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வேண்டுகோளில்,  கொரோனா தடுப்பு விதிகளான மாஸ்க் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவதல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

  • Share this:

    ஆண்டுதோறும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “உலக சுகாதர தினத்தில், கொரோனா தடுப்பு விதிகளான மாஸ்க் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவதல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    அதே சமயம் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், உடல் தகுதியுடன் இருப்பதற்கும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    Must Read : சரத்குமார் - ராதிகாவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை

    இந்நதாள் நமது உலகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இரவு பகலாக பாடுபடுவர்களுக்கு நாம் நன்றியையும் ஊக்கத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தும் நாளாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published: