முகப்பு /செய்தி /இந்தியா / எதிர்கட்சிகள் வீசும் சேற்றில் தாமரை மலரும் - மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு

எதிர்கட்சிகள் வீசும் சேற்றில் தாமரை மலரும் - மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

எவ்வளவு எதிர்த்தாலும் தாமரை மலரும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் அமளிகளுக்கிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

எதிர்க்கட்சிகள் சேற்றை வாரி வீச, வீச தாமரை மலர்ந்துகொண்டே இருக்கும் என எதிர்கட்சியினர் அமளிக்கிடையே மக்களவையில் பிரதமர் மோடி பேசினார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றியனார். அப்போது அவர் பேசுகையில்,  “ நாட்டின் தொலைதூர கிராமங்களுக்கு வளர்ச்சியை கொண்டு செல்வதில் வெற்றி பெற்றுள்ளோம். குறிப்பாக சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஜன் தன் கணக்கு இயக்கத்தை தொடங்கினோம். கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 48 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 11 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “ சில எம்பிக்கள் அவையை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். அவ்வாறு நடந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நீங்கள் எவ்வளவு சேற்றை வாரி எறிந்தாலும் தாமரை மலர்ந்து கொண்டே தான் இருக்கும்.  காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கவில்லை.  நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை.  நாட்டின் பிரச்னைகளுக்கு நாங்கள் நிரந்தர தீர்வுரை கண்டு வருகிறோம். மக்களின் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற இரவு பகலாக பணியாற்றி வருகிறோம். எங்களை பொறுத்தவரை நாட்டு மக்கள் தான் முக்கியம். பாஜக அரசு செயல்பட கூடிய அரசு என மக்கள் நம்புகிறார்கள்” என அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Parliament, PM Narendra Modi