Home /News /national /

நாடாளுமன்றம் முதல் ஐ.நா சபை வரை தமிழ் புகழ்..! - தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் பிரதமர் மோடி

நாடாளுமன்றம் முதல் ஐ.நா சபை வரை தமிழ் புகழ்..! - தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் நீரின்றி அமையாது உலகு என்ற குறளை மேற்கோள் காட்டி. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    நாடாளுமன்றம் முதல் ஐ.நா., சபை வரை செந்தமிழின் பெருமையையும், தொன்மையையும் உலகறியச் செய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி... அவர் எடுத்துரைத்த தமிழ் மொழியின் பெருமைகளை இந்தத் தொகுப்பில் காணலாம்...

     

    தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமராக திகழ்ந்து வருகிறார் நரேந்திர மோடி. தமிழகத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மட்டும் இன்றி, உலக அரங்கிலும் தமிழின் பெருமைகளை எடுத்துரைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். .முதலில் வணக்கம் என்றும், அதன்பின்னர் வணக்கம் தமிழ்நாடு என்றும் பேசத் தொடங்கிய பிரதமர் மோடி, படிப்படியாக பாரதியாரின் பாடல்கள் மற்றும் திருக்குறளை பல்வேறு மேடைகளில் தமிழிலேயே பேசி அனைவரையும் கவர்ந்து வருகிறார்

     

    2018-ல் அம்மா மானிய ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சியில், பாரதியின் “எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்ற பாடலை பாடி அசரவைத்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழில் பேசி வந்த நிலையில், இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், 2019-க்கு அடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிக அளவில் தமிழின் புகழை பாடி வருகிறார்.

    2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் நீரின்றி அமையாது உலகு என்ற குறளை மேற்கோள் காட்டி. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். தேசிய ஒற்றுமை தினத்தன்று “மன்னும் இமயமலை யெங்கள் மலையே மாநில மீதிது போற்பிறி திலையே!" என்ற பாரதியாரின் பாடலை பாடி, ஒற்றுமையின் மகத்துவத்தை பறைசாற்றினார்.

     

    கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் தாக்குதலை தொடர்ந்து, லடாக் சென்ற பிரதமர் மோடி, மறமானம் மாண்ட என்ற குறளை சுட்டிக்காட்டி, இந்திய ராணுவ வீரர்களுக்கு ஊக்கமளித்தார். தமிழ் மொழியின் சிறப்பை சுட்டிக்காட்டும் பிரதமர், மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன், வேட்டி, சட்டையுடன் உலா வந்து, நமது கலாசாரத்தையும் உலகறியச் செய்தார்.பொதுவெளியை தாண்டி, நாடாளுமன்றத்திலும் தமிழ் மணம் பரவச் செய்தார் பிரதமர் மோடி.

    Also Read:  PM Modi Birthday | ஆறிலிருந்து அறுபது வரை.. பிரதமர் மோடியின் அரிய 50 புகைப்படங்கள்

     

    2021-ல் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர், கல்லணை வாய்க்காலைப் புதுப்பிக்கும் பணிகள் குறித்து பேசுகையில் அவ்வையாரின் வரிகளை மேற்கோள்காட்டினார்.

     

    அதேபோன்று, ஆவடி டாங்க் ஆலையில் உருவான அர்ஜுனா டாங்க் பற்றிக் கூறும்போது, பாரதியின் "ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம்" பாடலை சுட்டிக்காட்டினார்.

    அண்மையில் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர், “செந்தமிழ்நாடெனும் போதினிலே” பாடலை குறிப்பிட்டு, தமிழர்களின் பெருமையை பறைசாற்றினார். நடைபெறும் நிகழ்ச்சி மற்றும் அந்த சூழலுக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்த குறள் மற்றும் தமிழ் பாடல்களை பிரதமர் சுட்டிக்காட்டி வருகிறார். உள்நாடு இன்றி வெளிநாட்டு பயணங்களின் போதும், தமிழ் பெருமையை பறைசாற்றியுள்ளார்.

     

    இவற்றுக்கெல்லாம் சிகரமாக ஐக்கிய நாடுகள் சபையில், புறநானூற்று பாடலை சுட்டிக்காட்டி, தமிழை தலைநிமிர்ச் செய்தார் பிரதமர் மோடி. இந்த நிலையில், பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடிக்கு நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு..
    Published by:Ramprasath H
    First published:

    Tags: BJP, Modi, Modi Birthday

    அடுத்த செய்தி