Home /News /national /

லதா மங்கேஷ்கரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி!

லதா மங்கேஷ்கரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி!

lata Mangeshkar Passes Away | லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் அவரது இல்லமான பிரபுகஞ்சில் இருந்து மாலையில் புறப்பட்டது.

lata Mangeshkar Passes Away | லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் அவரது இல்லமான பிரபுகஞ்சில் இருந்து மாலையில் புறப்பட்டது.

lata Mangeshkar Passes Away | லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் அவரது இல்லமான பிரபுகஞ்சில் இருந்து மாலையில் புறப்பட்டது.

    மும்பையில் நடைபெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகளில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

    இந்திய சினிமாவில் பல மொழிகளில் இன்றும் ரசிக்கும் படியான பல நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ள பிரபல பாடிகியான லதா மங்கேஷ்கர் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்டவர். பழம் பெரும் பாடகியான இவர் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், நேற்று மாலை மீண்டும் மோசமானது. தொடர்ந்து, இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

    லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்... மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

    லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும், இதன் போது இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசு சார்பில் லதா மங்கேஷ்கருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிராவில் நாளை பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கர் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் அவரது இல்லமான பிரபுகஞ்சில் இருந்து மாலையில் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று தங்களது அஞ்சலியை செலுத்தினர்.



    இந்நிலையில், லதா மங்கேஷ்கர் இறுதி சடங்குகளில் பங்கேற்க டெல்லியில் இருந்த மும்பை வந்தார் பிரதமர் மோடி. பின்னர், மும்பை சிவாஜி பூங்காவில் நடந்த லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகளில் பங்கேற்ற அவர், லதா மங்கேஷ்வரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Lata Mangeshkar, PM Modi

    அடுத்த செய்தி