தடுப்பூசியில் இந்தியாவுக்கு மகத்தான நாள் - பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி

ஒரே நாளில் ஒரு கோடியே எட்டு லட்சத்து 36 ஆயிரத்து 984 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

 • Share this:
  ஒரே நாளில் ஒரு கோடியே எட்டு லட்சத்து 36 ஆயிரத்து 984 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன, கடந்த 11 நாட்களில் மூன்றாவது முறையாக ஒரு கோடி தடுப்பூசி இலக்கு எட்டப்பட்டுள்ள நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் மற்றும் தடுப்பூசியில் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு மகத்தான நாள் என்று குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி, கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில், ஒரே நாளில் ஒரு கோடியே எட்டு லட்சத்து 36 ஆயிரத்து 984 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 11 நாட்களில் மூன்றாவது முறையாக ஒரு கோடி தடுப்பூசி இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 69 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை பாராட்டும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் மற்றும் தடுப்பூசியில் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு மகத்தான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

  இந்நிலையில், இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2ஆவது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,26,056 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 53,31,89,348 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த மாதம் 27-ஆம் தேதி, முதல் முறையாக நாடு முழுவதும் ஒரே நாளில் 1 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டது.

     2ஆவது தடவையாக, கடந்த 31ஆம் தேதி, 1 கோடியே 28 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இந்த சூழலில் 3ஆவது தடவையாக நேற்று 1 கோடி தடுப்பூசிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மாலை 6 மணி நிலவரப்படி, 90 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. இவற்றில், உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் 35 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

  Must Read : ஓவலில் சுருண்டது இங்கிலாந்து... இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

  ஒரே நாளில் ஒரு கோடியே எட்டு லட்சத்து 36 ஆயிரத்து 984 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன, கடந்த 11 நாட்களில் மூன்றாவது முறையாக ஒரு கோடி தடுப்பூசி இலக்கு எட்டப்பட்டுள்ள நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் மற்றும் தடுப்பூசியில் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு மகத்தான நாள் என்று குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: