எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை: பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்

எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை: பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்

பிரதமர் மோடி

பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சென்னையில் நூறு ரூபாயை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கின்றது.

 • Share this:
  பெட்ரோல் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசு, நடுத்தரக் குடும்பத்தினர் குறித்து யோசித்து, பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.

  பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சென்னையில் நூறு ரூபாயை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கின்றது. ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து, ரூ.100.13க்கு விற்பனை செய்யப்பட்டது.

  இந்நிலையில் பெட்ரோல் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயுக் குழாய் வழிப்பாதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். மேலும், சிபிசிஎல் மணலி - பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவுவையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும் பல திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

  அந்த விழாவில் பிரதமர் பேசுகையில், “2019-20ஆம் நிதியாண்டில் இந்தியா தன்னுடைய எண்ணெய்த் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி செய்துள்ளது. எரிவாயுத் தேவையில் 53 சதவீத அளவுக்கு இறக்குமதி செய்துள்ளது.

  இறக்குமதியை நாம் ஏன் அதிக அளவில் நம்பியுள்ளோம்? நான் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், முந்தைய அரசுகள் இந்த விவகாரம் குறித்துக் கவனம் செலுத்தி இருந்தால், நம்முடைய நடுத்தரக் குடும்பத்தினர் யாரும் அவதிப்பட்டிருக்க மாட்டார்கள்.

  மத்திய அரசு, நடுத்தரக் குடும்பத்தினர் குறித்து யோசிக்கிறது. அதனால்தான் பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துகிறது” என்று கூறினார்.

  Must Read : காவிரி படுகை சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு தமிழக திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

  கரும்பில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் மூலம், பெட்ரோல் இறக்குமதி செய்யப்படும் அளவு குறைவதோடு, விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: