ஃபுஜி மலைப்பகுதியில் ஜப்பான் பிரதமரின் ஓய்வுகால விடுதிக்கு சென்ற மோடி

PM Modi First World Leader At Shinzo Abe's Japan Holiday Home | இந்தியா- ஜப்பான் இடையேயான உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று டோக்கியோ சென்ற பிரதமர் மோடி ஃபுஜி மலைப்பகுதியில் ஜப்பான் பிரதமரின் ஓய்வுகால விடுதிக்கு சென்று பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்தார்.

news18
Updated: October 28, 2018, 1:43 PM IST
ஃபுஜி மலைப்பகுதியில் ஜப்பான் பிரதமரின் ஓய்வுகால விடுதிக்கு சென்ற மோடி
பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே
news18
Updated: October 28, 2018, 1:43 PM IST
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசியுள்ளார்.

இந்தியா- ஜப்பான் இடையேயான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று டோக்கியோ சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று ஜப்பானில் மலைகளால் சூழப்பட்ட யமனாசிக்கு பிரதமர் மோடி சென்றார்.  ஃபுஜி மலைப்பகுதியில் ஜப்பான் பிரதமரின் ஓய்வுகால விடுதிக்குச் சென்ற பிரதமர் மோடியை ஷின்சோ அபே கட்டியணைத்து வரவேற்றார்.

இதையடுத்து, ஃபுஜி மலைப்பகுதியில் பெருமைகளை பிரதமர் மோடிக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே விளக்கிக் கூறினார். அதன்பின்னர் இருவரும் கைகுலுக்கியபடி, புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தனர். இந்த சந்திப்பின் போது, இரு நாட்டு உறவு, சர்வதேச பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர். ஜப்பான் நாட்டின் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசும் மோடி, டோக்கியோவுக்கு அருகில் உள்ள ரோபட் ஆலையை பார்வையிட உள்ளார்.

இதையடுத்து ஃபுஜி மலைச்சாரலில் உள்ள பண்ணை வீட்டில் மோடிக்கு, ஷின்ஷோ அபேவின் குடும்பத்தினர் தனி விருந்து அளித்து கவுரவிக்க உள்ளனர். பிரதமர் மோடியை தவிர வேறு எந்த நாட்டு தலைவருக்கும் தனது வீட்டில் ஷின்சோ அபே தனி விருந்து அளித்ததில்லை.

Also see...

First published: October 28, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...