எட்டு வருட ஆட்சி என்பது மக்கள் எண்ணம் மாறுவதற்கு மிகவும் கூடுதலான நேரமாகும். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு எதிராக 2012-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஊழல் புகார்கள் வரத் தொடங்கின.
நரேந்திர மோடி ஒரு பிரதமராக எட்டு ஆண்டுகளைக் கடந்த பிறகும், 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு வலுவான நபராக அடி எடுத்துவைத்துள்ளார். உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான மக்களின் எண்ண ஓட்டம் பா.ஜ.கவுக்கு எதிராக இல்லை என்பதைக் காட்டுகிறது.
பணவீக்கப் பிரச்னை, கொரோனா பாதிப்பு, எல்லைப் பகுதியில் சீனாவுடன் நடைபெறும் மோதல், ரஷ்யா-உக்ரைன் போராடும் ஏற்பட்டுள்ள சர்வதேச சவால்கள் போன்ற சூழ்நிலைகள் இருக்கும்போது இத்தகைய சூழலில் மோடி போன்ற ஒரு வலுவான தலைவர்தான் இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும் என்று மக்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து மூத்த பா.ஜ.க தலைவர்களுடன் பேசும்போது, ‘சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும்போது பா.ஜ.கவின் மிகப்பெரும் தலைவர்களான அடல் பிகாரி வாஜ்பாயை 2004-ம் ஆண்டிலும், 2009-ம் ஆண்டு எல்.கே.அத்வானியையும் பிரதமராக வெற்றி பெறவிடாமல் தடுத்தார். ஆனால், சோனியா காந்தியாலயோ அல்லது ராகுல் காந்தியாலயோ மோடியை எதிர்க்க முடியவில்லை.
எனவே, மோடி தலைமையிலான பா.ஜ.க 2014-ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் அரசியல் சூழல் மாறுகிறது என்று நம்புகின்றனர். வாரிசு அரசியல் தேசிய அளவில் புறக்கணிக்கப்படுகிறது என்றும் நம்புகின்றனர். தேசியவாதத்தின் தீவிரமும், இந்துத்துவா வாக்காளர்கள் அதிகரிப்பதும், ஏழை கிராமப்புற வாக்காளர்களைக் கவர்வதும் மோடியின் வெற்றிச் சூத்திரமாக இருந்துவருகிறது.
எதிர்கட்சிகள் வலுவான சக்தியாக இருப்பதில் மட்டும் பின்னடைவை சந்திக்கவில்லை, அவர்களுடைய அரசியல் செயல்பாட்டிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன். 2014 மற்றும் 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் மோடி வெற்றி பெற்றது இரண்டு படிப்பினைகளைக் கொடுத்துள்ளது.
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது 10 ஆண்டு கால ஆளும்கட்சி எதிர்ப்பு, ஊழல் புகார்கள், அண்ணா ஹசாராவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் போன்றவை மக்கள் மனதை காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் திருப்பியது. மோடியின் தேசிய அளவிலான பிம்பம் மற்றும் தேசியவாதம் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிரான அவருடைய பிரச்சாரம் ஆகியவையின் மீது மக்களின் பார்வை சென்றது. இந்துத்துவா அரசியல் மற்றும் வளர்ச்சிக்கான வாக்குறுதிகள் பா.ஜ.கவை 282 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு உதவி செய்தது. உத்தரப் பிரதேசத்தில் 73 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்தது.
2019-ம் ஆண்டு தேர்தல் வெற்றியும் மிகப் பெரியது. அந்த வெற்றிக்கு காரணம் இல்லாமல் இல்லை. மோடியின் ஐந்து ஆண்டு காலத்தில் மோடி புதிய வாக்காளர்களை உருவாக்கியிருந்தது. அந்த வாக்காளர்கள், பயனடைந்தவர்கள் என்று வகைப்படுத்தலாம். அவர்கள், பெரும்பாலும் ஏழை மற்றும் கிராமப் புறத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.