உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று இணையதள நீதிமன்றங்கள், செயலி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தால் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவில் கொள்ளும் வகையில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இன்றைய தினம் அரசியல் சாசன தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த தினம் தேசிய சட்ட தினமாக கடைபிடிக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று இந்த தினத்தையொட்டி, உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் அரசியல் சாசன விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அப்போது மெய்நிகர் நீதி கடிகாரம், JustIs 2.0 செயலி, எண்ம நீதிமன்றம், எஸ் 3 வாஸ் வலைதளம் ஆகிய நீதித்துறை தொடர்பான சேவைகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாடு முன்னோக்கிய பாதையில் பயணித்து வருவதாகவும், மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை பின் தங்கிய மக்களை மேம்படுத்துகின்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், நமது நாட்டுக்கு அரசியல்சாசனம் மிகப்பெரும் பலமாக உள்ளதாகவும், அரசியலமைப்பை அளித்தவர்களின் கனவை நனவாக்குவோம் எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Constitution Bench, Narendra Modi, PM Modi, Supreme court