முகப்பு /செய்தி /இந்தியா / இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை: பிரதமர் மோடி பேச்சு

இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை: பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Prime Minister Modi | 2014 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேச்சு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Jaipur, India

இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விளையாட்டு திருவிழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு மத்தியில் காணொலி வழியாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பொருளாதார காரணங்களால் இளைஞர்கள் பின்தங்கி விடக்கூடாது என்பதில் மத்திய அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாக கூறினார். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெற்று வருவது, நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் எதிரொலி என்றும் மோடி குறிப்பிட்டார்.

அரசின் பார்வையில் இருந்து முந்தைய ஆட்சிகளில் விளையாட்டுகள் பார்க்கப்பட்டதால் வீரர்களுக்கு பல்வேறு தடைகள் இருந்ததாக அவர் கூறினார். ஆனால் தற்போதைய அமிர்த கால் ஆட்சியில் வீரர்களின் கண்ணோட்டத்தில் விளையாட்டுகள் பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்திய இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்றும் அவர்களின் திறன் வலிமையை உணர்ந்து, போதுமான ஊக்கம் அளிக்கப்படும்போது இலக்கு எளிதாகிவிடுவதாகவும் அவர் கூறினார்.

First published:

Tags: PM Modi