நாட்டின் உள்கட்டமைப்பை வலுபடுத்துவோம்: பிரதமர் மோடி

மோடி

நாட்டின் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, தன்னிறைவான இந்தியா என்னும் இலக்கை நாம்  அடைந்திருக்க வேண்டும் என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

  • Share this:
    டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களை இந்த நேரத்தில் நினைவுக் கூர்வோம் என்று குறிப்பிட்டார்.

    75வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் உரையாற்றிய மோடி,  நாட்டின் விடுதலைக்காக போராடிய அனைத்து விடுதலை போராட்ட வீரர்களையும் நாம் நினைவுக் கூரவேண்டும்.  நேரு போன்ற தலைவர்கள், ராஜ்குரு, சுக்தேவ், பகத் சிங் போன்ற விடுதலை வீரர்களை நினைவுக் கூர வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தியாவின் முன் தற்போதைய கொரோனா காலம் மிக பெரிய சவாலாக உள்ளது. இந்திய மக்கள் கட்டுப்பாடு மற்றும் பொறுமையுடன் கொரோனாவுக்கு எதிரான போரை நடத்தியுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பூசி கண்டுபிடித்தவர்கள் என அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

    மேலும் படிக்க: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!


    எனினும், கொரோனாவுக்கு எதிரான போரில் பலரையும் நாம் இழந்துள்ளோம். இந்த நீங்காத வடு எப்போது நம்மிடம் இருக்கும்’ என கூறினார்.



    உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்

    மேலும், நகரம், கிராமம் என்றில்லாமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும். உள்கட்டமைப்பில் ந்த நாட்டை விடவும் குறைவானவர்கள் இல்லை நாம்  என்பதை நிரூபித்து காட்டவேண்டும் என்று தனது உரையில் மோடி குறிப்பிட்டார்.  நாட்டின் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, தன்னிறைவான இந்தியா என்னும் இலக்கை நாம்  அடைந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும் படிக்க: சுதந்திர தின உரையில் ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு


    21ம் நூற்றாண்டில் புதிய உயரங்களை இந்தியா எட்ட வேண்டு. அதற்கு நாம் பின்தங்கியிருக்கு பகுதிகளுக்கு கை கொடுக்க வேண்டும். வடகிழக்கு பகுதி,  ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளடக்கிய இமயமலை பகுதி, கடலோரப் பகுதி மற்றும் பழங்குடிப் பகுதிகள் எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்றும் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
    Published by:Murugesh M
    First published: