சிங்கம் திரைப்படத்தில் வருவதுபோல பணியில் சேரும்பொழுதே ரவுடிகள் அனைவரும் பயந்து நடுங்க வேண்டும் என போலீசார் நினைக்கின்றனர் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் இளம் ஐ.பி.எஸ். பயிற்சி அதிகாரிகளிடம் காணொலி காட்சி வழியே உரையாடிய பிரதமர் மோடி, காக்கி சீருடையின் அதிகாரத்தினை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு பதிலாக அதனை அணிந்து கொள்வதில் நீங்கள் முதலாவதாக பெருமை கொள்ள வேண்டும். உங்களுடைய காக்கி சீருடைக்கான மரியாதையை ஒருபொழுதும் இழக்காதீர்கள் எனக் கூறினார்.
காவல்துறை அதிகாரிகள் பணியில் சேரும்பொழுதே, ஒவ்வொருவதும் நம்மை கண்டு பயப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக ரவுடிகள் பயப்படவேண்டும் என நினைக்கிறார்கள் சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களின் பாதிப்பால் போலீஸ் அதிகாரிகள் தங்களை அசாத்தியமானவர்களாக கருதிக்கொண்டு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து விலகிவிடக்கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க:
பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.. ஹேக்கர்கள் ட்வீட்டால் பரபரப்பு..
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஆற்றிய சிறந்த பணிக்கு பாராட்டுத் தெரிவித்த பிரதமர் மோடி, தங்களின் சேவை நீடித்து இருக்கும் எனவும், யோகா மற்றும் மன அழுத்தம் போக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் எனவும் பேசினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.