ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியப் பொருள்களை மட்டும் பயன்படுத்த புது வருடத்தில் உறுதிமொழி எடுப்போம் - மான்கி பாத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்தியப் பொருள்களை மட்டும் பயன்படுத்த புது வருடத்தில் உறுதிமொழி எடுப்போம் - மான்கி பாத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தியப் பொருள்களை மட்டுமே பயன்படுத்துவது என்று புதுவருடத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  2020 ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய மோடி, ‘கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், எப்போதுமில்லாத வகையில் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. இந்தப் பெருந்தொற்று நோய் பல்வேறு மாற்றங்களைப் புகுத்தியுள்ளது. மக்களுக்குப் பொருட்களை வழங்கும் சப்ளை செயின் பாதித்துள்ளது. சவால்களில் இருந்து மக்கள் பாடம் கற்றுள்ளார்கள். தற்போது மக்களிடம் புதிய உத்வேகத்தைப் பார்க்கிறேன். 2020-ம் ஆண்டில் உள்நாட்டில் தயாரிப்போம் எனும் முழக்கத்துக்கு உத்வேகம் கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த கொரோனா நெருக்கடியிலும் நாம் புதிய பாடங்களை கற்றுக்கொண்டதாகவும், தேசம் புதிய திறன்களை வளர்த்துள்ளது என்றும் பேசினார். இனி இந்திய பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது என புது வருடத்தில் உறுதிமொழி எடுத்து கொள்வோம் எனக்கூறிய மோடி, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை கூட இறக்குமதி செய்யாமல் இந்தியப் பொருட்களாகவே பயன்படுத்த வேண்டும் என்றும், 2014 முதல் 2018க்கு இடைப்பட்ட காலங்களில் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

  அடுத்த ஆண்டு ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகளை தவிர்க்க வேண்டும் எனக்கூறிய பிரதமர், கணினி வாயிலாக புத்தகங்களை எழுதும் தமிழகத்தைச் சேர்ந்த 92 வயது ஸ்ரீனிவாச சார்யா சுவாமிக்கு பாராட்டு தெரிவித்தார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: Mann ki baat, Modi