Home /News /national /

குழந்தைக்கு சுஷ்மா என்ற பெயர் சூட்ட முடிவெடுத்தார் என் அம்மா... பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு

குழந்தைக்கு சுஷ்மா என்ற பெயர் சூட்ட முடிவெடுத்தார் என் அம்மா... பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு

மோடி, சுஷ்மா சுவராஜ்

மோடி, சுஷ்மா சுவராஜ்

சுஷ்மா சுவராஜின் பிறந்தநாளான இன்று அவர் குறித்த நினைவுகளை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் ஃபேஸ்புக் பதிவில், ‘பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் முடித்துவிட்டு இப்போது நான் திரும்பிக்கொண்டிருக்கிறேன். இன்று சுஷ்மா சுவராஜின் பிறந்தநாள். உடனே எனக்கும் அவருக்கும் இடையே நடந்த பழைய நிகழ்வு ஒன்றை நினைத்துப் பார்த்தேன். அதனை நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்தில் நான் பா.ஜ.கவுக்கும் சுஷ்மா சுவராஜூக்கும் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

    அவர் அப்போது வத்நகரிலுள்ள என்னுடைய குடும்பத்தினர் இருக்கும் கிராமத்துக்குச் சென்றார். அங்கு எனது தாயைச் சந்தித்தார். அப்போது என்னுடைய அண்ணன் மகனுக்கு குழந்தைப் பிறந்தது. அப்போது, ஜோசியக்காரர்கள் அந்தக் குழந்தையின் ராசியைப் பார்த்து குழந்தையின் பெயரைத் தீர்மானித்தார்கள். அப்போது குடும்ப உறுப்பினர்கள் கூட அந்த ஜோசியக்காரர் சொல்லும் பெயரை வைப்பதற்கு முடிவு எடுத்தனர். அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

    சுஷ்மா சுவராஜைச் சந்தித்தற்குப் பிறகு என்னுடைய அம்மா குழந்தைக்கு சுஷ்மா என்று மட்டுமே பெயரிடுவேன் என்று தெரிவித்துவிட்டார்கள். என்னுடைய அம்மா அதிகம் படித்தவர் இல்லை.

    ஆனால், அவருடைய சிந்தனையைப் பொருத்தவரை அவர் நவீனமானவர். அன்று அவர் அவருடைய முடிவை அனைவரிடம் சொன்னவிதம் இன்னும் என் நினைவில் உள்ளது. சுஷ்மா சுவராஜின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Modi, Sushma Swaraj

    அடுத்த செய்தி