International yoga day 2021 : கொரோனா காலத்தில் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

‘நோய்நாடி நோய்முதல் நாடி’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி யோகா தினத்தில்பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

  • Share this:
    உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் கொடுக்கும் அரிய கலை யோகா. உலகமெங்கும் பரவி இருக்கிறது. இந்த யோகா கலையை உலகமெங்கும் பரப்பும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி ஐ.நா. சபையில் உரையாற்றினார்.

    இந்நிலையில், உலக நாடுகளின் ஆதரவுடன் ஆண்டு தோறும் ஜூன் 21ஆம் தேதி ‘சர்வதேச யோகா தினத்தை கொண்டாட முடிவு’ எடுக்கப்பட்டது. அதன்படி முதல் சர்வதேச யோகா தினம், 2015ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று 7ஆவது சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொது இடங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனாவின் 2ஆவது அலையை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தில் நாடு கடுமையாக போராடி வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருப்பதால், 7ஆவது சர்வதேச யோகா தினம் எளிமயான முறையில் கொண்டாடப்படுகிறது.

    அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை.

    Must Read : ஒரேநாளில் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சர்வதேச யோகா தினத்தில் இந்தியா இலக்கு!

    இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட இடங்களில் மத்திய அமைச்சர்கள் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்கின்றனர். “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினர்.

    நாள் தோறும் யோகாவை தவறாமல் செய்வோம்  ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.
    Published by:Suresh V
    First published: