முகப்பு /செய்தி /இந்தியா / ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இலக்கு.. பிரதமர் மோடி!

ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இலக்கு.. பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Prime minister modi | இப்போதைய கால கட்டத்தில் பெண்கள் ரஃபேல் விமானத்தையே இயக்குவதாக பெருமிதம் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | Delhi

ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே தங்களின் முன்னுரிமை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த தயானந்த் சரஸ்வதியின் 200வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்திராகாந்தி உள்விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி,யாகம் மற்றும் பூஜைகளில் பங்கேற்றார். பின்னர் மேடையில் பேசிய அவர், உலகம் முன்னேற்றத்தை அடைவதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும் என்று தயானந்த் நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அவர் விதைத்த நம்பிக்கை பாதையில் கோடிக்கணக்கான மக்கள் பயணிப்பதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மகளிருக்கு அதிகாரம் அளிக்கவும், சமூக ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிராகவும் குரல் எழுப்பியதாக தயானந்த் சரஸ்வதியை பிரதமர் மோடி புகழ்ந்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், இப்போதைய கால கட்டத்தில் பெண்கள் ரஃபேல் விமானத்தையே இயக்குவதாக பெருமிதம் தெரிவித்தார்.

First published:

Tags: Modi, PM Modi, Prime Minister Narendra Modi