அடுத்த 15 ஆண்டுகளுக்கு பிரிக்ஸ் ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும்- பிரதமர் மோடி

மோடி

அடுத்த 15 ஆண்டுகளுக்கு பிரிக்ஸ் அமைப்பு ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு செப்டம்பர் இன்று நடைபெற்றது. 2012 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது முறையாக இந்த ஆண்டின் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது.

  ‘பிரிக்ஸ்' உச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கியது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக 2016-ம் ஆண்டு கோவாவில் நடந்த மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து 13-வது ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.

  இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்கும்போது அதன் அனைத்து உறுப்பினர்களிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. கடந்த ஒன்றரை தசாப்தத்தில் பிரிக்ஸ் அமைப்பு பலவற்றை சாதித்துள்ளது. இன்று உலகின் வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் நம்முடைய குரல் மிகுந்த தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

  இந்தத் தளம் வளர்ந்துவரும் நாடுகளின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்துவதற்கு உதவியாக உள்ளது. அடுத்து வரும் 15 ஆண்டுகளை பிரிக்ஸ் அமைப்பு கூடுதல் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கான பிராக்ஸ் ஒத்துழைப்பு இருக்கும் என்று தெரிவித்தார்.

  இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இருந்தாலும், 150 பிரிக்ஸ் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அதில், 20 கூட்டங்கள் அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்றுள்ளது. நாம் பிரிக்ஸ் கூட்டமைப்பின் செயல்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தக் கூட்டத்தில் பேசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ‘உலகப் பாதுகாப்பு தீவிரமான சவால்களை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்காவும், அதன் கூட்டணிப் படைகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையைத் திரும்பப் பெற்றது புதிய பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. இது பிராந்தியங்கள் மற்றும் சர்வதேசப் பாதுகாப்பை எப்படி அச்சுறுத்தும் என்பது இதுவரையில் தெளிவாகத் தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: