ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்கள்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்கள்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

மனதின் குரல்

மனதின் குரல்

திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் 'நாக நதி' சில ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது. நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மேற்கொண்ட முயற்சியால்  மீண்டும் அந்த நதி உயிர்பெற்றுள்ளதாகவும் மோடி பாராட்டினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நதிகளின் திருவிழாவை ஆண்டில் ஒருமுறையாவது கொண்டாடும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழகத்தில் வறண்டு போன நாத நதியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்களுக்கு தனது பாராட்டுக்களையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

  பிரதமர் மோடி 81வது முறையாக வானொலி மூலம் சிறப்புரையாற்றிய  மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. அதில் பேசிய மோடி, செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக நதிகள் தினமாக கொண்டாடப்படுவதாக நினைவு கூர்ந்தார். தன்னலமில்லாமல் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் நதிகளை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

  ஆண்டுக்கு ஒருமுறையாவது நதிகளை நினைவுபடுத்தும் வகையில் விழாக்களை கொண்டாட வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார். தனக்கு பரிசாக கிடைத்த பொருட்களை ஏலம் விடுவதில் கிடைக்கும் பணத்தை கங்கை நதியின் தூய்மைக்கு செலவிட உள்ளதாகவும் மோடி கூறினார்.

  தொடர்ந்து பேசிய அவர்,  திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் 'நாக நதி' சில ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது. நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மேற்கொண்ட முயற்சியால்  மீண்டும் அந்த நதி உயிர்பெற்றுள்ளதாகவும் பாராட்டினார். தற்போது அந்த நதியில் தண்ணீர் அதிகளவில் செல்வதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க: இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது குலாப் புயல்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை

  கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தினம் தினம் இந்தியா உலக சாதனை நிகழ்த்துவதாக சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி,பண்டிகை காலங்கள் நெருங்குவதால், விதிகளை பின்பற்றி மக்கள் கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Mann ki baat, Prime Minister Narendra Modi