• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நம் அமைச்சர் நல்ல டான்சரும் கூட- மத்திய அமைச்சரின் நடனத்தைப் புகழ்ந்த மோடி

நம் அமைச்சர் நல்ல டான்சரும் கூட- மத்திய அமைச்சரின் நடனத்தைப் புகழ்ந்த மோடி

கிரண் ரிஜிஜூ

கிரண் ரிஜிஜூ

அருணாசலப் பிரதேசத்தில் பொதுமக்கள் மத்தியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ நடனம் ஆடியதை ட்விட்டரில் பகிர்ந்து பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

  • Share this:
    சீனாவின் எல்லையாக அமைந்துள்ள மாநிலம் அருணாசலப் பிரதேசம். பழங்குடி மக்கள் அதிகம் வாழும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ. சமீபத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அருணாச்சலப் பிரதேச கசாலங் கிராமத்துக்கு அமைச்சர் சென்றார். கிராமத்துக்கு வந்த அவரை, சஜலாக் கிராமத்தின் சஜோலாங் இன மக்கள் அவர்களுடைய பாரம்பரிய ஆட்டத்தை ஆடி வரவேற்றனர். அதனால் உற்சாகமடைந்த கிரண் ரிஜிஜூ, அந்த கிராம மக்கள் முன்னிலையில் அந்த மக்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தார்.

    இந்த வீடியோவை அவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘விவேகானந்தா கேந்திரா வித்யாலயா திட்டங்களைப் பார்வையிட அழகான கஜலாங் கிராமத்துக்குச் சென்றேன். விருந்தினர்களாக யார் கிராமத்துக்கு வந்தாலும் சஜோலாங் இன மக்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் இப்படிதான் வரவேற்பார்கள். இதுபோன்ற நாட்டுப்புற பாடல்களும், நடனங்களும்தான் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்துக்கும் முக்கியமானவை’ என்று குறிப்பிட்டிருந்தார்.


    அவருடைய பதிவை ரீட்வீட் செய்த பிரதமர் மோடி, ‘நம்முடைய சட்டத்துறை அமைச்சர் நல்ல நடனமாடுபவரும் கூட. அருணாச்சலப் பிரதேசத்தின் துடிப்பான மற்றும் புகழ்பெற்ற கலாச்சாரத்தைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: