முகப்பு /செய்தி /இந்தியா / நள்ளிரவில் கால் செய்து பிரதமர் மோடி கேட்ட கேள்வி... நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்த அமைச்சர் ஜெய்சங்கர்

நள்ளிரவில் கால் செய்து பிரதமர் மோடி கேட்ட கேள்வி... நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்த அமைச்சர் ஜெய்சங்கர்

 நெகிழ்ச்சியான சம்பவத்தை நினைவு கூறிய அமைச்சர் ஜெய்சங்கர்

நெகிழ்ச்சியான சம்பவத்தை நினைவு கூறிய அமைச்சர் ஜெய்சங்கர்

2016ம் ஆண்டில் நள்ளிரவில் பிரதமர் மோடி தொடர்புகொண்டு விழித்திருக்கிறாயா? என்று கேட்டதை நினைவு கூர்ந்து பகிர்ந்துகொண்ட அமைச்சர் ஜெய்சங்கர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 2016ம் ஆண்டில் நள்ளிரவில் பிரதமர் மோடியுடன் நடந்த நெகிழ்ச்சியான அலைப்பேசி உரையாடலைப் பற்றிப் பகிர்ந்துகொண்டு பிரதமர் மோடிக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்காவில் நியூயார்க் பகுதியில் நடந்த ”மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி” என்ற புத்தக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வெளியுறவு துரை அமைச்சர் ஜெய்சங்கர் 2016ம் ஆண்டு நள்ளிரவில் நடந்த நிகழ்வைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார். 2016ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மசார்-இ-ஷரீப் என்ற பகுதியில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மேல் தாக்குதல் நடைபெற்றது. அந்த நள்ளிரவில் பிரதமர் மோடி அப்போது வெளியுறவு செயலராக இருந்த ஜெய்சங்கருக்கு தொலைப்பேசி அலைப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், அன்று நள்ளிரவு ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகத்தின் மேல் தாக்குதல் நடைபெற்றுள்ளது என்ற செய்தி தெரிந்து நாங்கள் அங்கு என்ன நடைபெற்றது என்று தெரிந்துகொள்ள முயற்சி எடுத்துக்கொண்டு இருந்தோம். அப்போது என்னுடைய அலைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. பிரதமரின் அழைப்பிற்குக் காலர் ஜடி வரவில்லை. அழைப்பை எடுத்தவுடன் பிரதமர் முதலில் விழித்திருக்கிறாயா? என்று கேட்டார். அதற்கு நான் ஆம், இப்போது 12:30 மணி ஆகிறது. நான் விழித்துக்கொண்டு தான் இருக்கிறேன் என்றேன். மேலும் அவர் தொலைக்காட்சி பார்க்கிறாயா? என்று கேட்டார். நான் ஆம் என்று பதில் அளித்தேன்.

அதனைத் தொடர்ந்து அவர் உதவி வந்துகொண்டு இருக்கிறது. நிலைமை சரியானதும் எனக்குத் தகவல் கொடுக்கவும் என்று கூறினார். நான் அதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகும், நான் அலுவலகத்திற்குத் தெரிவிக்கிறேன் என்றேன். அவர் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறினார். இவ்வாறு அமைச்சர் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தேவையான நேரத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டதை அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டியுள்ளார். மேலும் கொரோனா காலத்தில் இந்தியா எடுத்த முக்கிய முடிவுகளைப் பற்றியும் பேசியுள்ளார். அதில் பிரதமர் மோடியின் பங்களிப்பைப் பற்றி பெருமையுடன் கூறியுள்ளார்.

Also Read : காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டி

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த நிலையில் அங்கு உள்ள இந்தியர்களை மீட்டது, கொரோனா கால நடவடிக்கைகளைப் போன்றவற்றைப் பற்றிக் கூறி பிரதமரை நெகிழ்ச்சியாகப் பாராட்டியுள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆண்டு கூட்டத்திற்கு கலந்துக்கொள்ளவதர்காக நியூயார்க்சென்றுள்ளார். மேலும் பல நாட்டு அதிகாரிகளை மற்றும் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

First published:

Tags: External Minister jaishankar, NewYork, PM Narendra Modi