மின் பகிர்மானத்துக்கு ரூ.3 லட்சம் கோடி: 16 மாநிலங்களில் பாரத் நெட் திட்டம் - அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல்

பிரதமர் மோடி உரை

மின் பகிர்மானத்தை மேம்படுத்த 3,03,758 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 • Share this:
  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இதில் நிர்மலா சீதாராமன் அறிவித்த 6,29,000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

  கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தும் பாரத் நெட் திட்ட அமலாக்கத்துக்காக தனியார் பொது பங்களிப்பு திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த திட்டம் முதல்கட்டமாக 16 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக 19,041 கோடி ரூபாய் ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

  மின் பகிர்மானத்தை மேம்படுத்த 3,03,758 கோடி ரூபாய்க்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு சார்பில் முதல்கட்டமாக 97,631 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

  மின்பகிர்மானத்தின் செயல்திறனை அதிகரிக்கவும், நிதி தன்னிறைவை உறுதிபடுத்தவும் இந்த துறைக்கு மத்திய அரசு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளது.

  அதேபோல் மின் கட்டணங்களை செலுத்த ரீசார்ஜ் முறையை கொண்டுவரவும், 25 கோடி மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் மக்கள் தங்களது அன்றாட மின் பயன்பாட்டின் அளவை அறிந்து கொள்ள முடியும்.

  மேலும், விவசாயிகளுக்கு என தனியாக 10 ஆயிரம் மின் வழித்தடங்களை 20 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த மின் வழித்தடங்களில் சூரிய மின் சக்தி இணைக்கப்படும். இதன்மூலம் விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் கிடைக்கும் சூரிய மின் சக்தியை பயன்படுத்துவதுடன், கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  Published by:Karthick S
  First published: