பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா

பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா
  • Share this:
உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா, பிரதமர் நரேந்திர மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதித்துறை மாநாடு உச்சநீதிமன்ற வளாகத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்க நிகழ்வில் பிரதமர் மோடி, சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, உண்மையும் சேவையுமே நீதித்துறையின் அடித்தளமாகக் கருதப்படுகிறது என்றார். மகாத்மா காந்தியின் வாழ்க்கை உண்மை மற்றும் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகவும், மகாத்மா காந்தி ஒரு வழக்கறிஞர் என்பது கூடுதல் சிறப்பு என்றும் தெரிவித்தார்.


அண்மையில் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்திய முக்கியமான தீர்ப்புகள் வெளிவந்ததாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தீர்ப்புகள் வெளியாகும் முன் அதன் விளைவுகள் குறித்து கவலைகளும் சந்தேகங்களும் வெளிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், 130 கோடி இந்தியர்களும் நீதித்துறை வழங்கிய தீர்ப்புகளை முழுமனத்துடன் ஏற்றுக்கொண்டதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

மேலும், சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கு இடையிலான சமநிலையை நமது நீதித்துறை பேணி வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். பாலின சமநீதி இல்லாமல் உலகில் எந்த சமூகமும் வளர்ச்சியை எட்டி விட முடியாது என்று தெரிவித்த பிரதமர் மோடி, மத்திய அரசு பெண்களின் நலன்களுக்காக மேற்கொண்ட திட்டங்களைக் குறிப்பிட்டார். இந்தியாவின் அனைத்து நீதிமன்றங்களையும் மின்னணு நீதிமன்றங்களாக மாற்ற அரசு முயற்சித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மாநாட்டில் பேசிய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பயங்கரவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு தனிமனித சுதந்திரம் என்பதே கிடையாது என்றார்.பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில், சுதந்திரமான வலிமையான நீதித்துறையை நமது அரசியலமைப்பு உருவாக்கியுள்ளதாக தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே பெருமிதம் தெரிவித்தார்.

மாநாட்டில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா, பிரதமர் நரேந்திர மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி எனத் தெரிவித்தார். சர்வதேச அளவில் சிந்திக்கக் கூடிய பிரதமர் மோடி, நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவார் என்று நீதிபதி அருண் மிஷ்ரா கூறினார்.

Also see:
First published: February 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்