• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உட்கட்டமைப்பால்தான் பொருளாதாரம் வலுப்பெறும் - கதிசக்தி திட்டத்தை தொடங்கிய வைத்த பிரதமர் மோடி

உட்கட்டமைப்பால்தான் பொருளாதாரம் வலுப்பெறும் - கதிசக்தி திட்டத்தை தொடங்கிய வைத்த பிரதமர் மோடி

மோடி

மோடி

தரமான உட்கட்டமைப்பால் பொருளாதாரம் வலுப்பெறுவதுடன் வேலைவாய்ப்பும் பெருகும் என கதிசக்தி திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

  • Share this:
    டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் திட்டத்தின் மாதிரிகளை பார்வையிட்டு, அதுதொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பின்னர் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், நூறு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கதிசக்தி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

    கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு துறை திட்டங்களுக்குப் பல அரசு அமைப்புகளிடம் இருந்து ஒப்புதல் பெறுவதில் உள்ள, கால தாமதத்தை தவிர்க்கும் நோக்கில் அனைத்து துறைகளையும் ஒரு முனையில் இணைக்கும் விதமாக, இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், அரசின் உட்கட்டமைப்பு திட்டங்களை, தாமதமின்றி விரைந்து செயல்படுத்த முடியும்.

    நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டிற்கான இந்த மாஸ்டர் பிளான் மூலம் அடுத்த 25 ஆண்டுக்கான அடித்தளத்தை அமைத்துள்ளதாகவும், தரைவழி, வான்வழி, நீர் வழி போக்குவரத்தை இணைக்கும் நோக்கிலான இத்திட்டம், 21ம் நூற்றாண்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கிய பங்களிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

    முன்பெல்லாம் திட்டங்கள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது என்ற பதாகைகள் மட்டுமே இருக்கும். ஆனால் அது நிறைவு பெறாது. அந்த நிலையை மாற்றி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், திட்டப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பெரும்பாலும் முன்னுரிமை அளிப்பது கிடையாது எனவும் ஆனால் நிலையான வளர்ச்சிக்கு தரமான உட்கட்டமைப்பு அவசியம் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: