காங்கிரசின் திட்டத்தை செயல்படுத்தினால் பணவீக்கம் அதிகரிக்கும்: பிரதமர் அச்சம்!

பிரதமர் மோடியின் கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பணமதிப்பிழப்பால் நலிவடைந்த பொருளாதாரம் மீட்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

news18
Updated: April 7, 2019, 9:28 AM IST
காங்கிரசின் திட்டத்தை செயல்படுத்தினால் பணவீக்கம் அதிகரிக்கும்: பிரதமர் அச்சம்!
பிரதமர் மோடி
news18
Updated: April 7, 2019, 9:28 AM IST
காங்கிரசின் சிறப்பு நிதித்திட்டத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என பிரதமர் மோடி அச்சம் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் சோனேபூர் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘‘பழங்குடியினர், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது.

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை ஒருவேளை காங்கிரஸ் செயல்படுத்தினால், பணவீக்கம் அதிகரிக்கும். சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வது மட்டுமின்றி, மலிவான விலையில் கிடைக்கும் அரிசி, கோதுமையின் விலையும் அதிகமாக உயரும்’’ என்று பேசினார் மோடி.

பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி நாட்டின் பெரிய தொழிலதிபர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும் வேளையில், காங்கிரஸ் ஏழைகளுக்கு பணம் வழங்குவதாக பதிலடி கொடுத்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்ததாக குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, காங்கிரசின் சிறப்பு நிதித்திட்டத்தின் எதிரொலியாக இந்திய பொருளாதாரம் மீண்டு வரும் என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Also see...

Loading...தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...