• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனா காலத்தில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

கொரோனா காலத்தில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

விவசாயிகளை பாதுகாக்க, விவசாய காப்பீடு திட்டத்தின் மூலம் பெருமளவில் இழப்பீடு தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    பருவநிலை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய இரட்டை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உற்பத்தி செய்யப்பட்ட 35 புதிய பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய பிரதமர், கொரோனா காலத்தில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், சிறப்புப் பண்புகளைக் கொண்ட 35 புதிய பயிர் வகைகளை உருவாக்கியுள்ளது. வறட்சியைத் தாங்கும் வகையிலான கொண்டைக்கடலை, வாடல் மற்றும் மலட்டுத்தன்மை எதிர்ப்பு சக்தி கொண்ட பட்டாணி, விரைவில் முதிர்ச்சியடைய கூடிய சோயாபீன்ஸ், நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்ட அரிசி வகைகள், உயிர்சத்துகள் வலுவூட்டப்பட்ட கோதுமை, தினை, சோளம், கினோவா, சிறகு அவரை, மொச்சை வகைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    மேலும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சத்து குறைபாடு உள்ள பயிர்களுக்கு மாற்றாக, புதியவை உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 2 சதவிகிதம் மட்டுமே எருசிக் அமிலம் கொண்ட கடுகும், ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகள் இல்லாத கோயா பீன்சும் அடங்கும்.

    அதேபோல், மரபணு மாற்றப்படாத அரிசி வகையை உற்பத்தி செய்துள்ளது. புசா பாசுமதி 1979 மற்றும் புசா பாசுமதி 1985 அரிசி வகைகளில் இமாஜெதாபிர் களைக்கொல்லியை பயன்படுத்தலாம். இவற்றை நாற்றங்கால் தயார் செய்யாமல், நேரடியாக விதைக்கலாம்.

    இந்த புதிய பயிர்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பிரதமர் மோடி, விவசாயத்துறை சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முன்னிலை வகிப்பதாக கூறினார். இந்தியாவில் பெரும்பாலும் சிறுகுறு விவசாயிகளே உள்ளனர். அவர்களை பாதுகாக்க விவசாய காப்பீடு திட்டத்தின் மூலம் பெருமளவில் இழப்பீடு தொகை கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

    பருவங்கள் மாறும்போதும், புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், வீரியமிக்க விதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அவர், பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி விவசாயிகளை இழப்பிலிருந்து மத்திய அரசு காப்பாற்றியதாகவும் தெரிவித்தார்.

    பாதுகாப்பும், உத்தரவாதமும் கிடைக்கும் போது, விவசாய துறை வளர்ச்சி பெறும் என்றும் விவசாயிகளின் நிலங்களை பாதுகாக்க, 11 கோடி மண் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். ராய்பூரில் கட்டப்பட்டுள்ள National Institute of Biotic Stress Tolerance நிறுவனத்தையும் மோடி நாட்டுக்காக அர்ப்பணித்தார்.

    Must Read : வங்கிக் கணக்குகளில் ஆட்டோ டெபிட் செய்ய புதிய விதிமுறைகள் 1-ம் தேதி முதல் அமல்

    தொடர்ந்து, வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதுகளை வழங்கிய பிரதமர், விவசாயத்தில் புதுமையான முறைகளை கையாண்ட விவசாயிகளுடனும் உரையாடினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: