Home /News /national /

’கலையுலகத்துக்கு பெரும் இழப்பு, எல்லா வீடுகளிலும் அவர் ஒரு அங்கம்’ - பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..

’கலையுலகத்துக்கு பெரும் இழப்பு, எல்லா வீடுகளிலும் அவர் ஒரு அங்கம்’ - பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..

pm modi condolence message

pm modi condolence message

இந்த துயரமான நேரத்தில் பாடகர் எஸ்.பி.பியின் ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறேன்’ என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தனது இரங்கல் செய்தியைத் தெரிவித்துள்ளார்.

    ’பாடகர் பாலசுப்ரமணியத்தின் மரணம் நமது கலையுலகத்துக்கு பெரும் இழப்பு. எல்லா குடும்பங்களிலும் அவரது பெயர் ஒரு அங்கம், அவரது இசை பல ஆண்டுகளாக மக்களை மகிழ்வித்தது. இந்த துயரமான நேரத்தில் பாடகர் எஸ்.பி.பியின் ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறேன்’ என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தனது இரங்கல் செய்தியைத் தெரிவித்துள்ளார்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.  அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்தநிலையில், நேற்றுமுதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. நேற்று, மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் அவரது உடல்நிலையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலதரப்பட்டவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Gunavathy
    First published:

    Tags: Modi, Narendra Modi, S.P.Balasubramaniyam

    அடுத்த செய்தி