ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி உரை

விண்வெளியிலும் ஆயுதங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள். இது எந்த சர்வதேச சட்டநடைமுறைகளையும் மீறிய செயல் அல்ல என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

விண்வெளியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது என்று நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஒவ்வொரு நாட்டின் பயணத்திலும் பெருமைமிகு நிகழ்வுகள் நடக்கும். அது காலத்துக்கும் வரும் தலைமுறையினருக்கும் வரலாற்றுச் சான்றாக நிற்கும். அத்தகைய நாள் தான் இன்று. எதிரிகளின் விண்வெளித் தாக்குதல்களை எதிர்த்து நிற்கும் திறன் கொண்டது A-SAT செயற்கைகோள். மிஷன் சக்தியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

மிஷன் சக்தி மிகவும் கடினமான சவால். மிகவும் துல்லியமாக அதிவேகத்தில் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இது இந்தியாவின் பெருமைமிகு அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் நமது விண்வெளி திட்டங்களின் திறனைக் காட்டுகிறது” என இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில், “ இந்தியாவின் இப்புதிய செயற்கைக்கோள் சாதனை, இந்தியாவுக்கு புதிய பலத்தைக் கொடுத்துள்ளது. இது முற்றிலும் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே அன்றி வேறு யாருக்கு எதிராகவும் இந்தத் திறனை தேவையில்லாமல் நாங்கள் பயன்படுத்தமாட்டோம் என சர்வதேச மக்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். விண்வெளியிலும் ஆயுதங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள். இது எந்த சர்வதேச சட்டநடைமுறைகளையும் மீறிய செயல் அல்ல” என்று பிரமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Also see... இந்திய பாதுகாப்புக்காக மிஷன் சக்தி

First published:

Tags: Anti satellite, Mission Shakti, PM Modi