Home /News /national /

INS விக்ராந்த் : இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

INS விக்ராந்த் : இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

INS விக்ராந்த் போர்க்கப்பல்

INS விக்ராந்த் போர்க்கப்பல்

INS விக்ராந்த் போர்க்கப்பல் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் போர் விமான கப்பல்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India
    கேரளா மாநிலம் கொச்சியில் இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்பான முதல் போர் விமானம் தாங்கி செல்லும் கப்பலைப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கப்பல் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எர்ணாகுளம் எம்பி ஹிபி ஈடன், கடற்படை தலைமை அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் கடற்படை மற்றும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கப்பல் படை மரியாதையை ஏற்றுப் பிரதமர் மோடி INS விக்ராந்த் போர்க்கப்பலைத் துவக்கிவைத்தார். மேலும் இந்தியக் கப்பல் படைக்கு புது கொடியையும் அறிமுகம் செய்துவைத்தார். இந்த INS விக்ராந்த் போர் விமான கப்பல் 262 மீட்டர் நீளமும் 62 மீட்டர் அகலமும் கொண்டது. இது 30 போர் விமானங்களைத் தூக்கிச் செல்லும் திறன் படைத்தது. மேலும் இதில் 1600க்கும் மேற்பட்ட வீரர்கள் பயணிக்கலாம்.

    அதிநவீன அம்சங்களுடன் 45,000-டன் எடையுள்ள பிரமாண்ட INS விக்ராந்த் உருவாக்க 20000 ரூபாய் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதனை இந்திய கடற்படைக்குச் சொந்தமான வார்ஷிப் டிசைன் பீரோ என்ற நிறுவனம் வடிவமைத்தது. கொச்சி கப்பல் கட்டும் தளம் நிறுவனம் இதனை தயாரித்துள்ளனர். இந்த கப்பல் மணிக்கு 52 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதில் 14 தளத்தில் 2300 பிரிவுகள் உள்ளது. மேலும் பிரயோகமாகப் பெண்களுக்கு என்று வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.



    இந்த போர்க்கப்பலில் MiG -29K போர் விமானங்கள், Kamov-31 ஹெலிகாப்டர்கள், MH-60R ரக ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை இயக்கும் வசதியுள்ளது. போர் விமானம் நிறுத்தும் பகுதியின் அளவு இரண்டு கால்பந்து திடல் அளவு இருக்கும். மேலும் இதில் நவீன மருத்துவ வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    Also Read : 5 நாட்களில் 4 கொலை... கேஜிஎப் ராக்கி பாய் போல் ஃபேமஸ் ஆக வேண்டுமென சீரியல் கில்லராக மாறிய இளைஞர்

    INS விக்ராந்த் போர்க்கப்பலுக்கு இந்த பெயர், 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் கடற்படையில் முக்கிய பங்கு வகித்த முக்கிய முன்னோடியின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இந்திய உற்பத்தியாளர்களால் 40000க்கும் மேற்பட்டவர்கள் உழைப்பில் முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டது.

    இந்த போர்க்கப்பல் அறிமுகத்தின் மூலம் உலகில் உள்நாட்டில் வடிவமைத்துப் போர்க்கப்பல் உருவாக்கிய நாடுகளின் வரிசையில் இந்திய இணைத்துள்ளது. INS விக்ராந்த் போர்க்கப்பல் இந்தியாவின் 'ப்ளூ வாட்டர் ஆர்மி' என்று அழைக்கப்படுகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Narendra Modi

    அடுத்த செய்தி