• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நரேந்திர மோடியால் எப்படி மக்கள் நம்பிக்கையை வெல்ல முடிந்தது?

நரேந்திர மோடியால் எப்படி மக்கள் நம்பிக்கையை வெல்ல முடிந்தது?

மோடி

மோடி

பிரதமர் மோடி சுமார் 20 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவராக இருந்துவருகிறார்.

  • Share this:
பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த பல வருடங்களாக இந்தியர்கள் மத்தியில் நிலவும் மோடியின் மேஜிக்கிலுள்ள சில கூறுகள் குறித்து விவரிக்க விரும்புகிறேன். மோடி மீது எந்த ஈர்ப்பு உள்ளது? கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மோடியின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் நம்பிக்கையுடன் இருக்கச் செய்தது என்ன? மக்கள் அவர் மீது ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. இந்தியாவின் எந்த மூலையில் கருத்துக் கணிப்பு நடத்தினாலும் அங்கு மோடியின் காரணி இருக்கும்.

ஒரு செய்தியாளராக கொரோனா இரண்டாவது அலையினால் மோசமாக பாதிக்கப்பட்டபோது பலதரப்பட்ட மக்களிடம் நான் பேசினேன். அவர்களிடம் ஒரு உத்வேகம் இருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மோசமான நாள்கள் விரைவில் சென்றுவிடும். மோடி சிறந்த தீர்வுடன் வருவார் என்று தெரிவித்தனர். அதற்கு காரணம், நரேந்திர மோடியின் முந்தைய கால ஆட்சி. அவர், குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த காலத்திலும், 7 ஆண்டுகள் பிரதமராக இருந்த காலத்திலும் மக்கள் அவரைப் பார்த்துள்ளனர். அதனால், எந்த மோசமான காலத்திலும் மீளும் சக்தி அவருக்கு உள்ளது என்று மக்கள் உறுதியாக நம்பினார்கள்.

ஏப்ரல், மே மாதம் இருந்த மோசமான காலக்கட்டத்துக்கும் தற்போது இருக்கும் சூழ்நிலைகளையும் ஒப்பிட்டுபாருங்கள். அமெரிக்கா கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்திலிருந்து மிகவும் தாமதாக இந்தியாவில் தடுப்பூசி போடும் தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருப்பினும், இந்த நான்கு மாத காலத்தில் 75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நான் செய்தியாளராக பணியாற்றிய காலத்தில் ஒரு தலைவர் மீது மிக அதிக நம்பிக்கையை வைத்திருப்பதை நான் இப்போதுதான் பார்க்கிறேன். அவரால் மக்களின் இந்த நம்பிக்கையும், உண்மையையும் காப்பாற்ற முடிகிறது. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி பிரதமர் மோடி செயல்படுகிறார்.

கட்டுரையாளர்: அமிஷ் தேவ்கன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: