பெண்கள், குழந்தைகளுக்கு போலீஸ் மீது நம்பிக்கை ஏற்படவேண்டும் - பிரதமர் மோடி

பெண்கள், குழந்தைகளுக்கு போலீஸ் மீது நம்பிக்கை ஏற்படவேண்டும் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: December 9, 2019, 10:37 AM IST
  • Share this:
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் காவல்துறையினர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற டிஜிபி-க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் பேசியஅவர், நாட்டின் பாதுகாப்பை சிறப்பாக பேணி வருவதற்காக அனைத்து மாநிலங்களின் டிபிஜி-க்களை குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேச டிஜிபி-க்களையும், துணை ராணுவத்தினரையும் வெகுவாக பாராட்டினார்.

மேலும், உன்னாவ் உள்ளிட்ட அத்துமீறல் சம்பவங்கள் நடைபெற்றதன் பின்னணியில் போலீசாருக்கு அறிவுரைகளையும் பிரதமர் மோடி வழங்கினார்.


தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி காவல்துறையினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரவேண்டும் என அறிவுறுத்தினார், அதற்கேற்றவாறு போலீசார் தங்களை மாற்றிக் கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Also see...
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading