இங்கிலாந்தின் முன்னாள் கருவூலத் தலைவர் ரிஷி சுனக் இங்கிலாந்தின் ஆட்சியை, அதன் பிரதமராக ஏற்கத் தயாராகி வருகிறார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில், பிரதமர் மோடி தீபாவளியை முன்னிட்டு சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்தார், அதே நேரத்தில் அவரது சாதனைக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும், உலக 2030 குறிக்கோளை செயல்படுத்துவதில் புதிய இங்கிலாந்து பிரதமராகவுள்ள ரிஷியுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.
ரிஷி சுனக், இங்கிலாந்தின் 57வது பிரதமராக பதவியேற்க உள்ளார் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
Warmest congratulations @RishiSunak! As you become UK PM, I look forward to working closely together on global issues, and implementing Roadmap 2030. Special Diwali wishes to the 'living bridge' of UK Indians, as we transform our historic ties into a modern partnership.
— Narendra Modi (@narendramodi) October 24, 2022
ரிஷி சுனக் :
இந்த ஆண்டில் இங்கிலாந்தின் பிரதமராகும் மூன்றாவது நபர் ரிசி சுனக் ஆவார். மேலும் பிரிட்டனின் மிகக் குறுகிய கால பிரதமராக 45 நாட்கள் மட்டுமே பணியாற்றிய லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பதிலாக அவர் பதவியேற்க இருக்கிறார்.
சுனக் 190 க்கும் மேற்பட்ட எம்.பி.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது போட்டியாளரான பென்னி மோர்டான்ட் 100 எம்.பி.க்களின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டார். இது பிரதமர் போட்டியில் நுழைவதற்கு முன்நிபந்தனையாகும்
42 வயதான ரிஷி சுனக் தனது பிரச்சாரத்தின்போது 2029 ஆம் ஆண்டிற்குள் வருமான வரியை 20% ல் இருந்து 16% ஆகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டவுடன் வரிகளைக் குறைப்பதாகக் கூறினார்.
இன்று நிகழும் பகுதி நேர சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டுமா... லடாக்கில் இருந்து நேரடி ஒளிபரப்பு
இங்கிலாந்து வங்கி சுதந்திரமாக இருப்பதை உறுதி செய்வதாகவும், மத்திய வங்கியுடன் இணைந்து செயல்படுவதே அரசின் கொள்கையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் பொதுச் செலவுகளை அதிகப்படுத்துவதாகவும், 'கழிவுகளை' குறைப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியும் இவரது பதவியேற்புக்கு இது ஒரு பெருமையான தருணம் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், “முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்கள் தங்கள் நாடுகளில் பெரும்பான்மையாக இல்லாத குடிமக்களை அரவணைத்து அரசாங்கத்தில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்”, என்றார்
ரிஷி சுனக்கை வாழ்த்திய சசி தரூர், “பிரிட்டிஷ்யர்கள் மிகவும் அரிதான ஒன்றைச் செய்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Britain, Prime Minister Narendra Modi, UK