பிரதமர் மோடியின் 76-வது மான்கி பாத் நிகழ்ச்சி: கொரோனா பாதிப்பு குறித்து முக்கிய உரை?

பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு மான்கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார்.

 • Share this:
  நரேந்திர மோடி, 2014-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதிலிருந்து மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மான் கி பாத் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்திய வானொலியில் உரையாற்றிவருகிறார். இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொள்வார். இந்த வாரம் அவர் பேசவுள்ளது 76-வது நிகழ்ச்சியாகும்.

  தற்போது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுங்கடங்காத பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் அந்த விவகாரம் குறித்தும் முக்கிய ஆலோசனைகளை குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முகக்கவசம் அணிவதன் அவசியம், கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொள்வது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்களையும் அவர் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: