டெல்லியில் ஓட்டுநர் இல்லா தானியங்கி ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்

டெல்லியில் ஓட்டுநர் இல்லா தானியங்கி ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்

பிரதமர் மோடி

இன்று 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. 2025 க்குள் இதை நாங்கள் 25 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு எடுத்துச் செல்வோம்.

  • Share this:
    ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில் சேவை டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

    டெல்லியில், 37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா நிற லைன், பிங்க் நிற லைனில் மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “நாட்டின் முதல் மெட்ரோ ரயில் வாஜ்பாயின் முயற்சியால் தொடங்கப்பட்டது. 2014 ல் எங்கள் அரசு அமைந்தபோது 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ சேவைகள் இருந்தன, இன்று 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. 2025 க்குள் இதை நாங்கள் 25 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு எடுத்துச் செல்வோம்” என்றார்.

    மேலும், “130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் டெல்லி ஒரு பெரிய உலகளாவிய நிதி மற்றும் மூலோபாய சக்தியின் தலைநகராகும், இந்த மகிமை இங்கே பிரதிபலிக்க வேண்டும். நாம் அனைவரும் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம், டெல்லி மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவோம், முன்னேறும் என்று நான் நம்புகிறேன்” என்றும் கூறினார்.

    இந்நிலையில், அனைத்து வழித்தடங்களிலும் ரயில் பயணிகள் பயன்படுத்தும் வகையிலான தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இந்த அட்டை வைத்திருப்பவர்கள் விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ் சேவையை அதே நாளில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: