Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத் தேர்தல் 2022 : பிரசாரத்தின்போது குறுக்கே வந்த ஆம்புலன்ஸ்.. வழிவிட்ட பிரதமர் மோடி..

குஜராத் தேர்தல் 2022 : பிரசாரத்தின்போது குறுக்கே வந்த ஆம்புலன்ஸ்.. வழிவிட்ட பிரதமர் மோடி..

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பிரதமர்

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பிரதமர்

Gujarat Election 2022 : குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டபோது அவ்வழியே வந்த ஆம்புலன்சுக்கு வழிவிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தலை ஒட்டி, அகமதாபாத்தில் சாலை மார்க்கமாக 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பேரணி மேற்கொண்டு ஆதரவு திரட்டினார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அகமதாபாத் நகரம் உட்பட 93 தொகுதிகளில், வரும் 5ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு திரட்டிவருகிறார்.

இந்நிலையில், ஹிராவதி, மணிநகர், ஜிவ்ராஜ் பார்க் மற்றும் சபர்மதி உட்பட 13 இடங்களில் உள்ள பொதுமக்களை சந்திக்கும் நோக்கில், 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனத்தில் பேரணி மேற்கொண்டார்.

இதையும் படிங்க : ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியா..!

 அப்போது, வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே, பிரதமர் வாகனம் சென்ற பகுதி வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.

அப்போது, பிரதமர் சென்ற வாகனம் ஓரமாக நிறுத்தப்பட்டு, ஆம்புலன்சுக்கு வழிவிடப்பட்டது. இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

First published:

Tags: Assembly Election 2022, Gujarat, India, PM Modi